aruvi

Advertisment

அருண் பிரபு இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் 'அருவி'. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி விருது விழாக்களிலும் பல விருதுகளை வென்று குவித்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="16ab08de-77d8-4682-9bf4-9a4985fe0ef6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_31.png" />

இந்த நிலையில், 'அருவி' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 'தங்கல்' படத்தில் நடித்துப் புகழ்பெற்ற பாத்திமா சனா ஷேக், மையக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இ.நிவாஸ் இயக்குகிறார்.

Advertisment

அருவி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.